amilsolution_ad_alt SivaTravel tamilsolution_ad_alt tamilsolution_ad_alt

பௌத்த, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு இன்று முதல் முற்றுப் புள்ளி- விஜேதாச

Wednesday, December 14, 2016அன்று பிரசுிரிக்கப்பட்டது.

சிங்கள பௌத்த அடிப்படைவாதமாக இருக்கட்டும், முஸ்லிம் அடிப்படைவாதமாக இருக்கட்டும் இன்று முதல் அதனைச் செயற்படுத்த முனைபவர்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

எமது சில பிக்குகள் பௌத்த மதத்துக்கு பொருந்தாத வகையில் தூஷனம் பேசிக் கொண்டும், தேவையற்ற சண்டித்தனத்துடனும் செயற்படுகின்றனர். இதனை பௌத்த மக்கள் அனுமதிப்பதில்லை. இத்தகையவர்கள் இனவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

இந்த நாட்டில் பிக்குகளுக்கென்றும் பொது மக்களுக்கென்றும் ஒரு சட்டம் கிடையாது.

இதேபோன்று, நாட்டில் தௌஹீத் ஜமாஅத் என ஒரு அமைப்பு காணப்படுகின்றது. இதன் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் பௌத்த மதத்தை பாரதூரமான முறையில் நிந்தனை செய்யும் விதத்தில் பேசியுள்ளார். இவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய நீண்ட உரையின் போது குறிப்பிட்டார்.

Live Radio 24 X 7

tamilsolution_ad_alt

விளம்பரப் பகுதி

tamilsolution_ad_alt
 
© 2016 sltstarfm All Rights Reserved.