amilsolution_ad_alt SivaTravel tamilsolution_ad_alt tamilsolution_ad_alt

மகளின் திருமண பரிசாக 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்த தந்தை.

Wednesday, December 14, 2016அன்று பிரசுிரிக்கப்பட்டது.


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்தியாவில் சமீபத்தில் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ரு.500 கோடி செலவில் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி பிரம்மிக்க வைத்தார்.

இந்நிலையில் மும்பையின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் முனோத் தனது மகள் ஷ்ரேயாவின் திருமணத்தை முன்னிட்டு குடிசையில் வசித்துவந்த 90 ஏழைகளுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அதே நேரம் தனது மகளின் திருமணத்திற்கு அவர் 70 முதல் 80 லட்சம் வரை மட்டுமே செலவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது மகள் ஸ்ரேயா கூறும்போது ''இதனை எனது தந்தை கொடுத்த மிகப்பெரிய திருமண பரிசாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு தந்தையாக தனது மகளுக்கு முனோத் கொடுத்த இந்த திருமண பரிசு உண்மையிலேயே விலையுயர்ந்தது தான்!

Live Radio 24 X 7

tamilsolution_ad_alt

விளம்பரப் பகுதி

tamilsolution_ad_alt
 
© 2016 sltstarfm All Rights Reserved.