amilsolution_ad_alt SivaTravel tamilsolution_ad_alt tamilsolution_ad_alt

கல்வியின் மூலம் மாற்றம் - 13000 மாணவர்களுக்கு உதவிய 'ஸம் ஸம்'

Wednesday, December 14, 2016அன்று பிரசுிரிக்கப்பட்டது.





ஸம் ஸம் நிறுவனத்தின் school with a smile செயல் திட்டத்தின் கீழ் 2017 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. மூவினத்தையும் சேர்ந்த 13000 மாணவச் செல்வங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இப் பொதியில் தரம் வாய்ந்த ஒரு புத்தகப் பை, சப்பாத்துக்கான 1000 ரூபா பெறுமதியான வவுச்சர், கொப்பிகள், காகிதாதிகள் என்பன உள்ளடங்குகின்றன.


இத்திட்டத்திற்கான சுமார் 40 மில்லியன் ரூபாவினை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இலங்கை சகோதரர்கள் மாத்திரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பண்டாரகொஸ்வத்தை,கலேவெல,மாத்தளை, தெல்தோட்டை, உடுநுவரை, வடதெனிய, மஸ்கெலிய, ஹட்டன், நுவரெலியா, வெலிமடை, லுனுகலை, மொனராகலை, பண்டாரவலை, தெஹிவலை, வெலிகமை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 250 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இச் செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.


பாடசாலை இடைவிலகலைக் குறைத்தல்,பெற்றோரின் கல்விக்கான செலவுக்குக் கைகொடுத்தல் மற்றும் சகவாழ்விற்குப் பங்களித்தல் ஆகிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு கல்வியின் மூலம் மாற்றத்தை உருவாக்க இத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.


இத் திட்டத்திற்கு உடலால்,பொருளால்,பணத்தால் உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஸம் ஸம் பவுண்டேஷன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


Jaffna Muslim

Live Radio 24 X 7

tamilsolution_ad_alt

விளம்பரப் பகுதி

tamilsolution_ad_alt
 
© 2016 sltstarfm All Rights Reserved.